search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் பொறுப்பு"

    பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #BalakrishnaReddy #Sengottaiyan
    சென்னை:

    பேருந்து மீது கல் வீசிய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

    சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.



    இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த விளையாட்டு துறை பொறுப்பை கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் கவனிப்பார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது, செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #BalakrishnaReddy #Sengottaiyan
    மத்திய மந்திரி தோமருக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பும், சதானந்த கவுடாவுக்கு வேதி மற்றும் உர துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. #NarendraSinghTomar #SadanandaGowda
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற விவகார துறை மற்றும் வேதி மற்றும் உர துறைக்கான மந்திரி அனந்த குமார் நேற்று உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடைபெற்றது.

    இந்நிலையில், அனந்த குமார் மறைந்த நிலையில், அவர் வகித்து வந்த பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளன.



    இதுதொடர்பாக, ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், வேதி மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு சதானந்த கவுடாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என தெரிவித்துள்ளது. #NarendraSinghTomar #SadanandaGowda 
    ×